யாரோ காணும் கனவு - Whose dream are we living?
After moving from my hometown to Chennai for work, I wrote these lines. Just sharing to see if anyone connects with the lyrics and to get some feedback
இத்தனை மறு நாட்களை எதிர்பார்க்க,
யார் கொடுத்த நம்பிக்கை இது?
யாரோ காணும் நிறைவேறா கனவு அது...
எத்தனை காலங்கள்,
இத்தனை காலைகள்!
ஒவ்வொரு விடியலும் ஒரு எதிர்பார்ப்பு…
வெளிச்சமில்லா உலகின்
முடிவை தேடிய ஒரு புறப்பாடு
யாரோ காணும் கனவின்
கதாபாத்திரம் நாமோ?
அந்தக் கனவில்,
எந்த நொடியில்
விழிப்போம் நாம்?
Posted Aug 17, 2025, 8:44 AM UTC
113